What is Presentation?!
Formally making a person known to another or to the public?!
A Good Presentation is a kind of communication between the speaker and the audience!
How can you give a presentation as a kind of communication to your audience?
n order to communicate with your audience…
Communicate 3 Kinds of Messages:
(1) Physical Message
(2) Story Message
(3) Visual Message
Here is Top 10 best presentation ever for your reference...
Top Ten Presentation
Friday, December 19, 2008
Friday, November 28, 2008
Friday, November 7, 2008
சர்தார் ஜோக்ஸ்
சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை! அதனால் தானோ என்னவோ அவர்களை கேவலப்படுத்துவதில் மற்றவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அபரிமிதமானது! அவர்களும் தங்களை முட்டாள்களாக சித்தரித்து வரும் நகைச்சுவைகளை ரசிக்க கற்றுக்கொண்டார்கள் போலும், தமிழனை இது போன்று கேலி செய்திருந்தால், தனக்குப் பொழுது போகவும், அரசியல் செய்யவும் இன்னொரு இனப்போராட்டம் ஏற்பாடு செய்து இருப்பான்.
சர்தார் ஜோக்ஸ் உங்களுக்காக...
சர்தார் ஜோக்ஸ் உங்களுக்காக...
- மரணப்படுக்கையில் இருந்த சர்தாரின் சீன நண்பர் கடைசியாக "சீ யு கின்" என்று கூறி இறந்து போனார். சர்தார் அதன் அர்த்தம் காண சீனா சென்றார். கடைசியாக சீன நண்பர் கூறிய அர்த்தம் என்ன என்று கண்டு கொண்டார்.... "நீ என் ஆக்ஸிஜன் குழாய் மேல் நிற்கிறாய்..."
- சர்தார் 1: இரவு முழுவதும் ரயிலில் தூங்கவே இல்லை...
சர்தார் 2: ஏன்?
சர்தார் 1: எனக்கு அப்பர் பெர்த்தில் தூக்கமே வராது...
சர்தார் 2: கீழே உள்ளவர்களிடம் கேட்டு மாத்தி இருக்கலாமே?
சர்தார் 1: யாராவது வந்தா மாத்திக்கலாம்னு தான் நினைச்சேன், கடைசி வரைக்கும் யாருமே வரல... - ஆசிரியை: இந்தியாவில் ஒவ்வொரு பத்து செகண்டுக்கும் ஒரு பெண் பிள்ளை பெறுகிறாள்
சர்தார்: நாம் உடனே அவளை கண்டு பிடித்து, தடுத்து நிறுத்த வேண்டும். - சர்தார் டியுப் லைட்டை தின்று கொண்டு இருந்தார். அவரது நண்பர் பதறிப்போய் "ஏன் டியுப் லைட்டை தின்கிறாய்" என்று கேட்டார். சர்தார் சொன்னார் "டாக்டர் என்ன லைட்டா சாப்பிட சொல்லி இருக்கிறார்"
- சர்தார்: அடியே, சீக்கிரம் இந்த காப்பிய குடி
சர்தாரிணி: ஏங்க?
சர்தார்: அங்கபாரு, சூடான காபி 5 ரூபா, கோல்ட் (cold) காபி 10 ரூபான்னு போட்டு இருக்கு...
Wednesday, October 29, 2008
சென்னை சிறந்த போக்குவரத்து வசதி உள்ள நகரமா?
உலகின் மூன்றாவது சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக சென்னையும், எட்டாவது சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக மும்பையும் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.
நெசம்தான் சொல்றாங்களா? என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல... நீங்க என்ன சொல்லறீங்க?
அப்போ, அம்பதாவது, நூறாவது இடத்துல இருக்கற நகரங்கள பத்தி யோசிக்க கூட முடியல...
http://www.forbes.com/2008/10/28/commute-cities-world-forbeslife-cx_mw_1028realestate_slide_9.html?thisSpeed=30000

Friday, October 24, 2008
தமிழன்
தமில் ஈலம் வேண்டி போராடும் இந்த மர(மற) தமிலர்களை அலைத்து சென்று யாராவது 'ழகரம்' சொல்லிக்கொடுத்தால் நல்லது.
தமிழை கொலை செய்யும் இவர்கள், இனப்படுகொலைக்காக போராடுகிறார்கள். இவர்களது தமிழ் கொலைக்கு எதிராக, யாராவது போராட வேண்டும் போல இருக்கிறது.

Wednesday, October 22, 2008
மொடாசிலா மதராஸ்பட்டேன்சிஸ்

இந்த பறவையின் பெயர் "மொடாசிலா மதராஸ்பட்டேன்சிஸ்". (Motacilla madaraspatensis) இது சிட்டுக்குருவி வகையை சார்ந்த ஒரு பறவையினம்.
இந்தியாவை தாயகமாக கொண்டது. இந்த பறவையினத்தின் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகவும், கழுத்துப்பகுதி கருப்பு நிறத்துடனும் காணப்படும். என்ன திடீர் என்று இந்த பறவை பற்றி என்று தானே நினைக்கிறீர்கள்!. பறவையின் பெயர் நமது மெட்ராஸ் பட்டினத்தின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. (Thanks TOI).
Saturday, October 18, 2008
சந்திரயான்
சந்திரயான், சமஸ்கிரதத்தில் 'நிலவு வாகனம்' என்று அர்த்தம். 2003 ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவில், திரு. வாஜ்பாய் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் கனவு திட்டம் சந்திரயான். 2008 ஆம் ஆண்டில் ஏவப்படும் என்று அறிவித்தார்.
அந்த நாள் வந்து விட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி காலை 6.20 மணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PSLV செலுத்து வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
இந்த செயற்கை கோள், தானே சூரிய ஒளியில் இருந்து, மின்சாரத்தை (approx 700W) தயாரித்து கொள்ளும் . விண்ணில் 590 கிலோ எடை கொண்டதாக இருக்கும். செலுத்து வாகனத்தில் அல்லது செயற்கை கோளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்யவும், செலுத்து வாகனம் பாதை மாறினால், ஆழ் விண் தொடர்பு ?! (Deep Space Network) மூலம் சரியான பாதைக்கு திருப்பிவிடவும் இயலும்.
இந்த ஆளில்லா செயற்கை கோள் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்? எதற்கு இந்தியா இதில் 400 கோடி ரூபாய்களை கொட்ட வேண்டும்?
உலகத்தில் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வழிகளை ஆராய்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த நிலவு செயற்கை கோள்கள், நிலவு ஆராய்ச்சி மையங்கள் போன்ற பல.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் புதிதாக இதில் இணைந்துள்ளது. மேற்கண்ட நாடுகள், கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.
சரி, விஷயத்துக்கு வருவோம். எரிபொருளுக்கும் நிலவுக்கும் என்ன சம்பந்தம்?
தற்போதைய நுக்ளியர் மின் உற்பத்தியில் ஹைட்ரஜன் ஐசோடோப்புகளும், ட்ரிதியம் மற்றும் ட்யூட்ரியம் எரிபொருளாக பயன்படுகின்றன. மேலும், யூரேனியத்தையும், ப்ளுடேனியத்தையும் பிரித்து கதிரியக்கத்தை வெளி விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகவும், பாதுகாப்பு குறைவானதாகவும் மற்றும் நீண்ட நாள் பயனளிக்க இயலாத வகையிலும் உள்ளது. இந்த குறை பாட்டை போக்க கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஹீலியம் இந்த குறைபாட்டை ஓரளவு போக்கும் என்று கண்டறிந்தனர். மேலும், ஹீலியம்-3 பாதுகாப்பானது. தற்போதைய எரிபொருள்கள் போல் இல்லாமல் மிகக் குறைவாக கதிரியக்கத்தை வெளிவிட கூடியது . ஆனால் ஹீலியம் உலகில் மிக அரிதான ஒன்று
உலகில் மிக அரிதான ஹீலியம் 3(helium-3), நிலவில் அதிகமாக இருப்பதாக தெரிந்ததில் இருந்து தான் எல்லா நாடுகளும் நிலவை ஆராய (exploring moon)போட்டி போடுகின்றன
நிலவில் 11,00,000 மெட்ரிக் டன் ஹீலியம்-3 இருப்பதாக கூறப்படுகிறது. இதை 600 டிகிரி செண்டிகிரேட்டில் சூடு படுத்துவதன் மூலம் பூமிக்கு கொண்டு வர முடியும்.
ஹீலியத்தை பூமிக்கு கொண்டு வருவது செலவு பிடிக்கும் சமாசாரம் என்றாலும், எல்லா நாடுகளும் கவலை படாமல் பணத்தை தண்ணீராக இறைக்க காரணம், நாளைய எரிபொருள் தேவை. இந்தியாவிடம் ஹீலியம் இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தற்போதைய எண்ணை வள நாடுகள் போல் இந்தியாவும் செழிப்பாக ஆக முடியும். இதை கருத்தில் கொண்டு தான் இந்தியாவும் சந்திரயான்-1 முதல் சந்திரயான்-5 வரை திட்டம் வைத்து உள்ளது.

இதெல்லாம் சாத்தியப்பட்டால், கூடிய விரைவில் இந்திய பொருளாதாரம் PSLV போல் மேலே போக உதவியாக இருக்கும்.
Friday, October 17, 2008
பொருளாதாரம்
'இந்தியா ஒருநாள் பொருளாதார வல்லரசாகும்'
நான் கூட நம்பி இருந்தேன், 'நமது பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை மிஞ்சி சென்று விடும்' என்று...
பின்னே அமெரிக்க பொருளாதாரம் நம்மை விட கிழே போனால், நாம மேல வரத்தானே செய்வோம்.
சப்புன்னு ஆயிருச்சு....

Thursday, October 9, 2008
தானியங்கி மூவுருளி
"தானியங்கி மூவுருளின்னா என்னண்ணே?"
"அதாண்டா 'ஆட்டோ' வத்தான் அப்படி சொல்லராங்கடா"
"அப்போ ஆட்டோமொபைல்னா என்ன சொல்லறது?"
"ம்ம்... 'நடமாடும் தானியங்கி'ன்னு வச்சுக்க, ஏன்டா நான் என்ன தமிழ் பண்டிட்டா?"
"டெலிபோன்னா, தொலை பேசி தானே அண்ணே?"
"அதுல என்னடா சந்தேகம் உனக்கு?"
"டெலிவிஷன்னா, தொலைக்காட்சி தான அண்ணே?"
"ஆமடா டே"
"டெலிகிராம்ன்னா ஏன் அண்ணே 'தொலைநிறை'ன்னு பேரு வைக்காம 'தந்தி'ன்னு பேர் வச்சாங்க?"
"டே ஓடிப்போயிரு"

Sunday, October 5, 2008
பகுத்தறிவு வாதி
பகுத்தறிந்து, கடவுள் உண்டு என்று கண்டாலும், நான் பகுத்தறிவு வாதி ஆக முடியாது?!
பகுத்தறிந்தால், எப்படி குறிப்பிட்ட மத நம்பிக்கைகளும், சடங்குகளும் மட்டும் கேலிக்குரியதாகின்றன?
தலைவர் சிலைக்கு மாலை போட்டால் பகுத்தறிவு, சாமி சிலைக்கு மாலை போட்டால்....
தலைவர் சமாதிக்கு சென்று கும்பிட்டு நின்றால் பகுத்தறிவு, சாமி சிலைக்கு முன் கும்பிட்டு நின்றால்...
தமிழில் பல்வேறு விளக்கங்கள் உள்ள ஒரே வார்த்தையாக பகுத்தறிவு விளங்குவது ஒரு சாதனை தான் போங்கள்.

Wednesday, October 1, 2008
மிடோரி (operating system)
மிடோரி ஆப்ரடிங் சிஸ்டம் பற்றி நிறைய வதந்திகளும், தகவல்களும் பரப்பப்படுகின்றன. மிடோரி விண்டோசின் எமன் என்றும், இல்லை நண்பன் என்றும் செய்திகள் உலவுகின்றன...
மிடோரி என்றால் பச்சை என்று ஜப்பான் மொழியில் அர்த்தமாம். உலகில் உள்ள ஆபெரடிங் சிஸ்டம்களில் விண்டோஸ் 80 சதவிகித இடத்தை பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று உள்ளது. இவ்வளவு பெரிய சந்தையை இழக்க மைக்ரோசாஃப்ட் விரும்புமா ? இவ்வளவு பிரம்மாண்டமான வளர்ச்சியை மிடோரி பெறுமா?
மிடோரியை சந்தை படுத்துவதில் உள்ள சிரமங்களை களைய மைக்ரோசாஃப்ட் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. நிபுணர்களின் கருத்துப்படி மிடோரி விண்டோசுடன் சேர்ந்து பயன்ப்படுமாறே அமைக்கப்படும். அதனால் விண்டோசின் சந்தையையும் இழக்காமல் புதிய ஆபெரடிங் சிஸ்டத்தை பயன் பாட்டில் கொண்டு வர முடியும் என்று கருதுகிறார்கள்.
மிடோரி தற்போதுள்ள நடைமுறை சிரமங்கள் அனைத்தையும் களைவதாக அமையும் என கருதப்படுகிறது. தகவல் பரிமாற்றம், இணைய நடைமுறை (connectedness) சிக்கல்கள் மற்றும் பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.
எரிக் ராட்டேர், துணை இயக்குனர், டெக்னாலஜி அவர்கள் தலைமையில் இந்த மிடோரி உருவாக்கபடுவதாக கூறப்படுகிறது. மிடோரியை வெளியிடுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றும் அது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்!...

Friday, September 26, 2008
மரம் நடுவது எப்படி?
ஐயா, ஒரு மரக்கன்னு நட்டு இருக்கியளா? ஆர்வமாவது இருக்கா? இருந்தா, இத படிங்க...
நீங்க மரம் (கன்னு) நட தீர்மானம் பண்ணிட்டீங்கன்னு வச்சுக்குங்க, முதல்ல எங்க நடரதுன்னு முடிவு பண்ணிட்டு அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளருமுன்னு தெரிஞ்சுக்குங்க, போதுமான சூரிய ஒளி கிடைக்குமான்னு பாத்துக்குங்க, அந்த மரம் வளர போதுமான இடம் இருக்கான்னு பாருங்க...
அப்புறம் முக்கியமான ஒண்ணு என்னன்னா, வேருக்கு நல்ல தண்ணி கிடைக்குமான்னு பாத்துக்கங்க, அப்பதான் ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும். கொஞ்சம் நல்ல வடிகால் வசதி இருந்தா ரொம்ப நல்லதுங்க...
பன்னிரண்டு மீட்டர் அகலதுலயும் பன்னிரண்டு மீட்டர் ஆழதுலயும் ஒரு குழிய வெட்டி தண்ணி ஊத்தி சோதனை பண்ணி பாருங்க, தண்ணி வடிய ஆறு மணி நேரத்துக்கும் மேல ஆச்சுன்னா, வேற இடம் பாக்கறது உசிதமுங்க.
இதெல்லாம் சரி பாத்து நட்டுடீங்கன்னா, இப்போ மனுஷ பய கிட்ட இருந்தும், ஆடு, மாடு, பூச்சி கிட்ட இருந்தும் காப்பாதனுன்க. கொஞ்சம் இயற்கை உரம் நல்லதுங்க... சரியான அளவு தண்ணி ஊத்தி............... :)
Wednesday, September 17, 2008
நிழல்
தொட்டுத் தொடரும் ஒரு இருட்டு பாரம்பரியம். ஒளி கடக்க முடியாத இடம் இருள் கொள்கிறது. நிழலென அறியப்படுகிறது.
நிழல், பகலிலும் இருட்டை கொள்ளும் தன்மை கொண்டது.
மனிதன் மற்றும் விலங்கின் நிழலால் என்ன பயன் இருக்கிறது? பெரிய நிழல் சிறிய நிழலை முழுங்கும் தன்மை கொண்டதா?.
கிட்டத்தட்ட அனைத்து பொருள்களும் நிழலை கொள்ளும் தன்மை கொண்டு உள்ளன. தண்ணீருக்கு நிழல் உண்டா? சில சமயங்களில் உண்டு என்றே கூறவேண்டும். தண்ணீரும் அலையாலும், நீர் குமிழிகளாலும் நிழல் பெரும்.
மழை நிழல் (rain shadow) என்று ஒன்று உள்ளது. மலையின் மீது பெய்யும் மழையால் மறுபக்க மலையடிவாரத்தில் உண்டாகும் நிழல், மழை நிழல் என அறியப்படுகிறது.
மையப்புள்ளி கொள்ளாத ஒளி, வெவ்வேறு ஒளிகள் சந்திக்கும் இடம் பல நிழல்களை பெறுகிறது (umbra, penumbra and antumbra). நிழல் சூரிய, சந்திரர்களை கூட விட்டு வைப்பதில்லை. கிரகணங்களை உண்டு செய்து மனிதர்களை பரிகாரம் செய்ய வைக்கிறது.
மனிதர்களுக்கு நிழல் பயம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. சில அறியப்படாத நிழல் பேய் என அறியப்படுகிறது.

Tuesday, September 16, 2008
அதிவேக சாலைகள்
இன்று இந்தியாவின் அனைத்து பெருநகரங்களும் ஒரு அதிவேக சாலையாவது கொண்டு இருக்கின்றன.
சென்னையை பொறுத்தமட்டில் பழைய மகாபலிபுரம் சாலை இன்று ஐடி எக்ஸ்பிரஸ் ஹைவேயாக மாற்றப்பட்டு கொண்டு இருக்கின்றது. சில நாட்களில் நுழைவு கட்டணமும் வசூல் செய்ய வகை செய்ய படுகிறது. எனது ஐயப்பாடு எதெனில் இதே போன்ற நுழைவு கட்டணம் அண்ணா சாலைக்கும் விரிவு படுத்த படுமோ? என்றுதான்.
அண்ணா சாலைக்கும், ஐ டி ஹைவேக்கும் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை. இரண்டிலும் மாடுகளும், மனிதர்களும் சாலையின் குறுக்கே வந்து வாகன ஓட்டிகளை பயமுறுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் சாலையை கடக்க குறைந்தது 30 படிகள் கொண்ட சப்வே அல்லது FOB அமைக்கப்பட்டு உள்ளன. குறுக்கிலும், பக்க வாட்டிலும் நிறைய சிறு சாலைகள் உள்ளன.
ஆதலினால் அண்ணா சாலைக்கும் டோல் கேட் அமைப்பது சால பொருத்தமாக இருக்கும்?.

Labels:
anna salai,
IT Highway,
OMR,
அண்ணா சாலை,
ஐ டி ஹைவே
யூசபிலிட்டி (Usability)
பயன்படுத்தி என்று தமிழ் படுத்தி உங்களை படுத்த விரும்பவில்லை.
யூசபிலிட்டி என்றால் பயனீட்டை எளிமை படுத்துதல் என்று கொள்ளலாம். யாராவது சரியான பதம் எது என்று தெரிவித்தால் ஏற்றுகொள்ளப்படும். என் அறிவுக்கு எட்டியவரை இதை பற்றி தமிழில் ஏதேனும் உள்ளதா என்று தெரியவில்லை.
பயனீட்டை எளிமை படுத்துதல் - உதராணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களுமே பயன்பாட்டை எளிமை படுத்தியதால் ஏற்றுக்கொள்ளப்படவையே. தொலைபேசி, நாற்காலி, தொலைக்காட்சி ரிமோட் மற்றும் பல பொருட்களை உதாரனமாக கொள்ளலாம்.
நடைமுறையில் பயன்படுத்த கடினமானவற்றை யாரும் உபயோகிக்க விரும்புவதில்லை. நாற்காலி தற்போது சுழலும் தன்மை உடையதாகவும், உயரும் மாற்றி அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு பயன் பாட்டை எளிமை படுத்தி இருக்கிறார்கள். இவ்வகையில் அனைத்து பொருள்களும் ஒரு மாற்றத்தை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முந்தைய தொலைக்காட்சியா நாம் இன்று காண்பது? எழுந்து சென்று சேனல் மாற்ற தேவை இல்லாமலும் அதிக இடத்தை அடைக்காமலும் வடிவமைக்க பட்டு இருக்கின்றன.
இவ்வாறு இன்று கணினி மென்பொருள் துறையில் வேகமாக வளர்த்து வரும் ஒரு பிரிவாக இந்த யூசபிலிட்டி ஆகி கொண்டு இருக்கிறது. கடைக்கோடி பயணீட்டாளரை (end user) மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன.
மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட், கூகிள், ஈபே, அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் யூசபிளிட்டிக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதனால் இது போன்ற நிறுவனங்களில் பொருட்கள் அதிக விற்பனை ஆகின்றன. பயன்பாட்டை எளிமை படுத்தி வெற்றி கண்ட நிறுவனங்கள் எத்தனை எத்தனையோ...
இத்துறை பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் greatshankar@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
சில பயனுள்ள இணைய தளங்கள்:
www.useit.com
www.upassoc.org

software,
Usability,
user interface,
சாப்ட்வேர்,
பயன்பாடு
Subscribe to:
Posts (Atom)