Friday, September 26, 2008
மரம் நடுவது எப்படி?
ஐயா, ஒரு மரக்கன்னு நட்டு இருக்கியளா? ஆர்வமாவது இருக்கா? இருந்தா, இத படிங்க...
நீங்க மரம் (கன்னு) நட தீர்மானம் பண்ணிட்டீங்கன்னு வச்சுக்குங்க, முதல்ல எங்க நடரதுன்னு முடிவு பண்ணிட்டு அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளருமுன்னு தெரிஞ்சுக்குங்க, போதுமான சூரிய ஒளி கிடைக்குமான்னு பாத்துக்குங்க, அந்த மரம் வளர போதுமான இடம் இருக்கான்னு பாருங்க...
அப்புறம் முக்கியமான ஒண்ணு என்னன்னா, வேருக்கு நல்ல தண்ணி கிடைக்குமான்னு பாத்துக்கங்க, அப்பதான் ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும். கொஞ்சம் நல்ல வடிகால் வசதி இருந்தா ரொம்ப நல்லதுங்க...
பன்னிரண்டு மீட்டர் அகலதுலயும் பன்னிரண்டு மீட்டர் ஆழதுலயும் ஒரு குழிய வெட்டி தண்ணி ஊத்தி சோதனை பண்ணி பாருங்க, தண்ணி வடிய ஆறு மணி நேரத்துக்கும் மேல ஆச்சுன்னா, வேற இடம் பாக்கறது உசிதமுங்க.
இதெல்லாம் சரி பாத்து நட்டுடீங்கன்னா, இப்போ மனுஷ பய கிட்ட இருந்தும், ஆடு, மாடு, பூச்சி கிட்ட இருந்தும் காப்பாதனுன்க. கொஞ்சம் இயற்கை உரம் நல்லதுங்க... சரியான அளவு தண்ணி ஊத்தி............... :)
Wednesday, September 17, 2008
நிழல்
தொட்டுத் தொடரும் ஒரு இருட்டு பாரம்பரியம். ஒளி கடக்க முடியாத இடம் இருள் கொள்கிறது. நிழலென அறியப்படுகிறது.
நிழல், பகலிலும் இருட்டை கொள்ளும் தன்மை கொண்டது.
மனிதன் மற்றும் விலங்கின் நிழலால் என்ன பயன் இருக்கிறது? பெரிய நிழல் சிறிய நிழலை முழுங்கும் தன்மை கொண்டதா?.
கிட்டத்தட்ட அனைத்து பொருள்களும் நிழலை கொள்ளும் தன்மை கொண்டு உள்ளன. தண்ணீருக்கு நிழல் உண்டா? சில சமயங்களில் உண்டு என்றே கூறவேண்டும். தண்ணீரும் அலையாலும், நீர் குமிழிகளாலும் நிழல் பெரும்.
மழை நிழல் (rain shadow) என்று ஒன்று உள்ளது. மலையின் மீது பெய்யும் மழையால் மறுபக்க மலையடிவாரத்தில் உண்டாகும் நிழல், மழை நிழல் என அறியப்படுகிறது.
மையப்புள்ளி கொள்ளாத ஒளி, வெவ்வேறு ஒளிகள் சந்திக்கும் இடம் பல நிழல்களை பெறுகிறது (umbra, penumbra and antumbra). நிழல் சூரிய, சந்திரர்களை கூட விட்டு வைப்பதில்லை. கிரகணங்களை உண்டு செய்து மனிதர்களை பரிகாரம் செய்ய வைக்கிறது.
மனிதர்களுக்கு நிழல் பயம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. சில அறியப்படாத நிழல் பேய் என அறியப்படுகிறது.

Tuesday, September 16, 2008
அதிவேக சாலைகள்
இன்று இந்தியாவின் அனைத்து பெருநகரங்களும் ஒரு அதிவேக சாலையாவது கொண்டு இருக்கின்றன.
சென்னையை பொறுத்தமட்டில் பழைய மகாபலிபுரம் சாலை இன்று ஐடி எக்ஸ்பிரஸ் ஹைவேயாக மாற்றப்பட்டு கொண்டு இருக்கின்றது. சில நாட்களில் நுழைவு கட்டணமும் வசூல் செய்ய வகை செய்ய படுகிறது. எனது ஐயப்பாடு எதெனில் இதே போன்ற நுழைவு கட்டணம் அண்ணா சாலைக்கும் விரிவு படுத்த படுமோ? என்றுதான்.
அண்ணா சாலைக்கும், ஐ டி ஹைவேக்கும் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை. இரண்டிலும் மாடுகளும், மனிதர்களும் சாலையின் குறுக்கே வந்து வாகன ஓட்டிகளை பயமுறுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் சாலையை கடக்க குறைந்தது 30 படிகள் கொண்ட சப்வே அல்லது FOB அமைக்கப்பட்டு உள்ளன. குறுக்கிலும், பக்க வாட்டிலும் நிறைய சிறு சாலைகள் உள்ளன.
ஆதலினால் அண்ணா சாலைக்கும் டோல் கேட் அமைப்பது சால பொருத்தமாக இருக்கும்?.

Labels:
anna salai,
IT Highway,
OMR,
அண்ணா சாலை,
ஐ டி ஹைவே
யூசபிலிட்டி (Usability)
பயன்படுத்தி என்று தமிழ் படுத்தி உங்களை படுத்த விரும்பவில்லை.
யூசபிலிட்டி என்றால் பயனீட்டை எளிமை படுத்துதல் என்று கொள்ளலாம். யாராவது சரியான பதம் எது என்று தெரிவித்தால் ஏற்றுகொள்ளப்படும். என் அறிவுக்கு எட்டியவரை இதை பற்றி தமிழில் ஏதேனும் உள்ளதா என்று தெரியவில்லை.
பயனீட்டை எளிமை படுத்துதல் - உதராணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களுமே பயன்பாட்டை எளிமை படுத்தியதால் ஏற்றுக்கொள்ளப்படவையே. தொலைபேசி, நாற்காலி, தொலைக்காட்சி ரிமோட் மற்றும் பல பொருட்களை உதாரனமாக கொள்ளலாம்.
நடைமுறையில் பயன்படுத்த கடினமானவற்றை யாரும் உபயோகிக்க விரும்புவதில்லை. நாற்காலி தற்போது சுழலும் தன்மை உடையதாகவும், உயரும் மாற்றி அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு பயன் பாட்டை எளிமை படுத்தி இருக்கிறார்கள். இவ்வகையில் அனைத்து பொருள்களும் ஒரு மாற்றத்தை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முந்தைய தொலைக்காட்சியா நாம் இன்று காண்பது? எழுந்து சென்று சேனல் மாற்ற தேவை இல்லாமலும் அதிக இடத்தை அடைக்காமலும் வடிவமைக்க பட்டு இருக்கின்றன.
இவ்வாறு இன்று கணினி மென்பொருள் துறையில் வேகமாக வளர்த்து வரும் ஒரு பிரிவாக இந்த யூசபிலிட்டி ஆகி கொண்டு இருக்கிறது. கடைக்கோடி பயணீட்டாளரை (end user) மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன.
மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட், கூகிள், ஈபே, அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் யூசபிளிட்டிக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதனால் இது போன்ற நிறுவனங்களில் பொருட்கள் அதிக விற்பனை ஆகின்றன. பயன்பாட்டை எளிமை படுத்தி வெற்றி கண்ட நிறுவனங்கள் எத்தனை எத்தனையோ...
இத்துறை பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் greatshankar@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
சில பயனுள்ள இணைய தளங்கள்:
www.useit.com
www.upassoc.org

software,
Usability,
user interface,
சாப்ட்வேர்,
பயன்பாடு
Subscribe to:
Posts (Atom)