Friday, November 28, 2008



Friday, November 7, 2008

சர்தார் ஜோக்ஸ்

சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை! அதனால் தானோ என்னவோ அவர்களை கேவலப்படுத்துவதில் மற்றவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அபரிமிதமானது! அவர்களும் தங்களை முட்டாள்களாக சித்தரித்து வரும் நகைச்சுவைகளை ரசிக்க கற்றுக்கொண்டார்கள் போலும், தமிழனை இது போன்று கேலி செய்திருந்தால், தனக்குப் பொழுது போகவும், அரசியல் செய்யவும் இன்னொரு இனப்போராட்டம் ஏற்பாடு செய்து இருப்பான்.

சர்தார் ஜோக்ஸ் உங்களுக்காக...

  1. மரணப்படுக்கையில் இருந்த சர்தாரின் சீன நண்பர் கடைசியாக "சீ யு கின்" என்று கூறி இறந்து போனார். சர்தார் அதன் அர்த்தம் காண சீனா சென்றார். கடைசியாக சீன நண்பர் கூறிய அர்த்தம் என்ன என்று கண்டு கொண்டார்.... "நீ என் ஆக்ஸிஜன் குழாய் மேல் நிற்கிறாய்..."


  2. சர்தார் 1: இரவு முழுவதும் ரயிலில் தூங்கவே இல்லை...
    சர்தார் 2: ஏன்?
    சர்தார் 1: எனக்கு அப்பர் பெர்த்தில் தூக்கமே வராது...
    சர்தார் 2: கீழே உள்ளவர்களிடம் கேட்டு மாத்தி இருக்கலாமே?
    சர்தார் 1: யாராவது வந்தா மாத்திக்கலாம்னு தான் நினைச்சேன், கடைசி வரைக்கும் யாருமே வரல...

  3. ஆசிரியை: இந்தியாவில் ஒவ்வொரு பத்து செகண்டுக்கும் ஒரு பெண் பிள்ளை பெறுகிறாள்
    சர்தார்: நாம் உடனே அவளை கண்டு பிடித்து, தடுத்து நிறுத்த வேண்டும்.

  4. சர்தார் டியுப் லைட்டை தின்று கொண்டு இருந்தார். அவரது நண்பர் பதறிப்போய் "ஏன் டியுப் லைட்டை தின்கிறாய்" என்று கேட்டார். சர்தார் சொன்னார் "டாக்டர் என்ன லைட்டா சாப்பிட சொல்லி இருக்கிறார்"

  5. சர்தார்: அடியே, சீக்கிரம் இந்த காப்பிய குடி
    சர்தாரிணி: ஏங்க?
    சர்தார்: அங்கபாரு, சூடான காபி 5 ரூபா, கோல்ட் (cold) காபி 10 ரூபான்னு போட்டு இருக்கு...