Monday, November 2, 2009

படிப்பு, சிந்தனை, எழுத்து...

என் அலுவலகத்தில் ஒரு சுவையான விவாதம்.

ஒருவன்: கமல் கல்யாணம் ஒரு ஹம்பக்ன்னு சொல்லி இருக்கார். அவர் எப்பிடி அப்பிடி சொல்லலாம். அவரோட ரசிகனும் கல்யாணம் பண்ணலன்னா என்ன ஆகும்?

இரண்டாமவன்: அது கமலோட கருத்து. என்னை பொறுத்தவரை கல்யாணம் என்கிற concept ரொம்ப ஆராய்ச்சிக்கு பின்னாடியே நம்ம முன்னோர்களால் முன்மொழியப்பட்டு இருக்கும்னு தோணுது. ஏன்னா.... குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு தான் கல்யாணத்தை ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இன்னொருவன்: நீ அதை பற்றி படிக்காமல் எப்பிடி அப்பிடி கூறலாம். அதுதான், அப்பிடித்தான் என்று கூறும் முன்னால் நீ அதை பற்றி எதையாவது படித்து இருக்க வேண்டும்.

இரண்டாமவன்: ஆமாம் ஆனால் நான் படிக்கும் புத்தகம் எழுத்தாளரின் கருத்து தானே.... அவருடைய கருத்தில் இருந்து நான் வேறு படலாம். அவர் படித்த புத்தகம் அவரை இது போன்று எழுத தூண்டி இருக்கலாம். எல்லா புத்தகத்துக்கும் மூன்று பக்கங்கள்... முதல் பக்கம், எழுத்தாளருடையது. இரண்டாவது பக்கம், வாசகருடயது. மூன்றாவது பக்கம், உண்மை.

உண்மை தனித்தே இருக்கிறது.

இன்னொருவன்: சிறிது படிப்பு உன்னை மேலும் சிந்திக்க வைக்கும். basic படிப்பு ரொம்ப முக்கியம். I mean it's like a degree...

இரண்டாமவன்: கரெக்ட், ஆனா ஆதி மனிதன் - எழுத படிக்க கூட தெரியாத மனிதன் கண்டு பிடித்த பொருட்களை தான், நாகரீகத்தை தான் நாம் தொடர்கிறோம். எந்த படிப்பும் இல்லாத மனிதன் கண்டு பிடித்த சக்கரம்... மனித குலத்தை வேறு நாகரீகத்தை கற்றுக்கொள்ள உதவியது. படிப்பை விட தனி மனித சிந்தனை மிக பெரியது... அளப்பரியது...

ஒருவன்: என்னால் இதை ஒத்துக்கொள்ள முடியாது. படிப்பு மனித குலத்தை நாகரீகமுற செய்தது.

இரண்டாமவன்: சக்கரத்தை, அதன் உபயோகத்தை தெரிந்து கொள்ள உதவியது படிப்புதான். ஆனால் அந்த எண்ணம் தோன்றியது படிப்பறிவில்லாதவன் சிந்தையில்....

இன்னொருவன்: படிப்பு தான் நாகரீகம்.

இரண்டாமவன்: நான் படிப்புக்கு எதிரானவான் அல்ல.. ஆனால் படித்து வரும் சிந்தனை தான் சரி என்ற கருத்துக்கு எதிரானவன்.

ஒருவன்: படித்தால் தான் சிந்தனை வரும்.

இரண்டாமவன்: எனக்கு என்னமோ தேவைதான் சிந்திக்க தூண்டுவதாக (படிப்பறிவற்றவனையும்) தோன்றுகிறது.

ஒருவன்: இரண்டுமே வேண்டும்....

******

இது முடிவில்லாத வாதம் போல் தோன்றியது. படிப்புடன் கூடிய சிந்தனை மட்டும் சரி மற்றது எல்லாம் சரியில்லை?!! இருக்கலாம்... சில நேரங்களில் படித்த சிந்தனையும் கெடுதலில் முடிந்து இருக்கிறது... அணுகுண்டு போல...

தேவை சிந்தனையை தூண்டுகிறது. படிப்பு செம்மைபடுத்துகிறது.

படிப்பில் தேவையானதை தேர்ந்து எடுக்கும் பொறுப்பு அவரவர் தேவையும், தேடுதலையும் பொறுத்தது. படிப்பு எப்போதும் எழுத்தாளருடைய சிந்தனையை நம்மில் திணிக்கிறது. நம் சிந்தனை நம்மோடு... நம் எழுத்து அடுத்தவர் சிந்தனையை குலைத்து நம் சிந்தனையை அவருள் திணிக்க கூடியது... அது தவறானதாக இருப்பினும்....