அந்த நாள் வந்து விட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி காலை 6.20 மணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PSLV செலுத்து வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
இந்த செயற்கை கோள், தானே சூரிய ஒளியில் இருந்து, மின்சாரத்தை (approx 700W) தயாரித்து கொள்ளும் . விண்ணில் 590 கிலோ எடை கொண்டதாக இருக்கும். செலுத்து வாகனத்தில் அல்லது செயற்கை கோளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்யவும், செலுத்து வாகனம் பாதை மாறினால், ஆழ் விண் தொடர்பு ?! (Deep Space Network) மூலம் சரியான பாதைக்கு திருப்பிவிடவும் இயலும்.
இந்த ஆளில்லா செயற்கை கோள் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்? எதற்கு இந்தியா இதில் 400 கோடி ரூபாய்களை கொட்ட வேண்டும்?
உலகத்தில் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வழிகளை ஆராய்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த நிலவு செயற்கை கோள்கள், நிலவு ஆராய்ச்சி மையங்கள் போன்ற பல.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் புதிதாக இதில் இணைந்துள்ளது. மேற்கண்ட நாடுகள், கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.
சரி, விஷயத்துக்கு வருவோம். எரிபொருளுக்கும் நிலவுக்கும் என்ன சம்பந்தம்?
தற்போதைய நுக்ளியர் மின் உற்பத்தியில் ஹைட்ரஜன் ஐசோடோப்புகளும், ட்ரிதியம் மற்றும் ட்யூட்ரியம் எரிபொருளாக பயன்படுகின்றன. மேலும், யூரேனியத்தையும், ப்ளுடேனியத்தையும் பிரித்து கதிரியக்கத்தை வெளி விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகவும், பாதுகாப்பு குறைவானதாகவும் மற்றும் நீண்ட நாள் பயனளிக்க இயலாத வகையிலும் உள்ளது. இந்த குறை பாட்டை போக்க கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஹீலியம் இந்த குறைபாட்டை ஓரளவு போக்கும் என்று கண்டறிந்தனர். மேலும், ஹீலியம்-3 பாதுகாப்பானது. தற்போதைய எரிபொருள்கள் போல் இல்லாமல் மிகக் குறைவாக கதிரியக்கத்தை வெளிவிட கூடியது . ஆனால் ஹீலியம் உலகில் மிக அரிதான ஒன்று
உலகில் மிக அரிதான ஹீலியம் 3(helium-3), நிலவில் அதிகமாக இருப்பதாக தெரிந்ததில் இருந்து தான் எல்லா நாடுகளும் நிலவை ஆராய (exploring moon)போட்டி போடுகின்றன
நிலவில் 11,00,000 மெட்ரிக் டன் ஹீலியம்-3 இருப்பதாக கூறப்படுகிறது. இதை 600 டிகிரி செண்டிகிரேட்டில் சூடு படுத்துவதன் மூலம் பூமிக்கு கொண்டு வர முடியும்.
ஹீலியத்தை பூமிக்கு கொண்டு வருவது செலவு பிடிக்கும் சமாசாரம் என்றாலும், எல்லா நாடுகளும் கவலை படாமல் பணத்தை தண்ணீராக இறைக்க காரணம், நாளைய எரிபொருள் தேவை. இந்தியாவிடம் ஹீலியம் இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தற்போதைய எண்ணை வள நாடுகள் போல் இந்தியாவும் செழிப்பாக ஆக முடியும். இதை கருத்தில் கொண்டு தான் இந்தியாவும் சந்திரயான்-1 முதல் சந்திரயான்-5 வரை திட்டம் வைத்து உள்ளது.
இதெல்லாம் சாத்தியப்பட்டால், கூடிய விரைவில் இந்திய பொருளாதாரம் PSLV போல் மேலே போக உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment