Wednesday, September 17, 2008

நிழல்

தொட்டுத் தொடரும் ஒரு இருட்டு பாரம்பரியம். ஒளி கடக்க முடியாத இடம் இருள் கொள்கிறது. நிழலென அறியப்படுகிறது.

நிழல், பகலிலும் இருட்டை கொள்ளும் தன்மை கொண்டது.

மனிதன் மற்றும் விலங்கின் நிழலால் என்ன பயன் இருக்கிறது? பெரிய நிழல் சிறிய நிழலை முழுங்கும் தன்மை கொண்டதா?.

கிட்டத்தட்ட அனைத்து பொருள்களும் நிழலை கொள்ளும் தன்மை கொண்டு உள்ளன. தண்ணீருக்கு நிழல் உண்டா? சில சமயங்களில் உண்டு என்றே கூறவேண்டும். தண்ணீரும் அலையாலும், நீர் குமிழிகளாலும் நிழல் பெரும்.

மழை நிழல் (rain shadow) என்று ஒன்று உள்ளது. மலையின் மீது பெய்யும் மழையால் மறுபக்க மலையடிவாரத்தில் உண்டாகும் நிழல், மழை நிழல் என அறியப்படுகிறது.

மையப்புள்ளி கொள்ளாத ஒளி, வெவ்வேறு ஒளிகள் சந்திக்கும் இடம் பல நிழல்களை பெறுகிறது (umbra, penumbra and antumbra). நிழல் சூரிய, சந்திரர்களை கூட விட்டு வைப்பதில்லை. கிரகணங்களை உண்டு செய்து மனிதர்களை பரிகாரம் செய்ய வைக்கிறது.

மனிதர்களுக்கு நிழல் பயம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. சில அறியப்படாத நிழல் பேய் என அறியப்படுகிறது.

1 comment:

Unknown said...

hmm different...gud keep on writing this kind of topic than other normal... it shows ur uniqueness..
--- hari---