Wednesday, October 1, 2008

மிடோரி (operating system)

மிடோரி ஆப்ரடிங் சிஸ்டம் பற்றி நிறைய வதந்திகளும், தகவல்களும் பரப்பப்படுகின்றன. மிடோரி விண்டோசின் எமன் என்றும், இல்லை நண்பன் என்றும் செய்திகள் உலவுகின்றன...

மிடோரி என்றால் பச்சை என்று ஜப்பான் மொழியில் அர்த்தமாம். உலகில் உள்ள ஆபெரடிங் சிஸ்டம்களில் விண்டோஸ் 80 சதவிகித இடத்தை பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று உள்ளது. இவ்வளவு பெரிய சந்தையை இழக்க மைக்ரோசாஃப்ட் விரும்புமா ? இவ்வளவு பிரம்மாண்டமான வளர்ச்சியை மிடோரி பெறுமா?

மிடோரியை சந்தை படுத்துவதில் உள்ள சிரமங்களை களைய மைக்ரோசாஃப்ட் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. நிபுணர்களின் கருத்துப்படி மிடோரி விண்டோசுடன் சேர்ந்து பயன்ப்படுமாறே அமைக்கப்படும். அதனால் விண்டோசின் சந்தையையும் இழக்காமல் புதிய ஆபெரடிங் சிஸ்டத்தை பயன் பாட்டில் கொண்டு வர முடியும் என்று கருதுகிறார்கள்.

மிடோரி தற்போதுள்ள நடைமுறை சிரமங்கள் அனைத்தையும் களைவதாக அமையும் என கருதப்படுகிறது. தகவல் பரிமாற்றம், இணைய நடைமுறை (connectedness) சிக்கல்கள் மற்றும் பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.

எரிக் ராட்டேர், துணை இயக்குனர், டெக்னாலஜி அவர்கள் தலைமையில் இந்த மிடோரி உருவாக்கபடுவதாக கூறப்படுகிறது. மிடோரியை வெளியிடுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றும் அது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்!...

2 comments:

expertdabbler said...

babu apple sorgam nu solraar.. enakku apple mac pazhakkam illai..
en nanbargal .. ubuntu est nu solraanga...

enakku ennamo medori vandha udane 'ahaa vista evlo super OS' nu solra madhiri dhaan irukkum nu thonudhu!

ubuntu free ngra karanathinaal.. OC il kedacha phenyl kooda kudippen ngra karanthinal enai adhigam yosikka vaippadhu ubuntu dhaan..

Shankar said...

Apple eppovumae nalla than irukkum. enakku ubuntu pathi romba knowledge illa, ithuvaraikkum pathathu kooda illa athanala athu pathi romba theriyathu.

midori pathina thagaval entha alavukku unmainnu theriyathu, microsoftkku windows fulla wanish pannara alavukku guts irukkannu theriyathu. aana markering (Emathu velai?!) vishayathula ella paya pullaikalum microsoft pakkathula kooda vara mudiyarathulla.

etho onnu potti pottu cheap and best ethavathu iruntha namakku nallathuthan.